Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றத்து சுவாமிகளுக்கு வெள்ளிக் ... 55 அடி உயர முருகன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு ! 55 அடி உயர முருகன் கோவிலில் மண்டல பூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: யாத்திரி நிவாஸ் புக்கிங் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 டிச
2014
01:12

திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், நாளை காலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. பக்தர்கள் வசதிக்காக, யாத்திரி நிவாஸ் திறக்கப்பட்டு, புங்கிங் நடைபெற்று வருகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா கடந்த, 21ம் தேதி, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மறுநாள், பகல் பத்து உற்சவம் துவங்கியது, நிறைவு நாளான இன்று காலை, நம்பெருமாள், மோகினி அலங்காரமும், நாளை காலை, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.தொடர்ந்து, ராப்பத்து உற்சவான திருவாய்மொழி திருநாள் நிகழ்ச்சி துவங்கி, ஜனவரி, 7ம் தேதி, நம்பெருமாள், திருக்கைத்தல சேவை புரியவுள்ளார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், பல இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. தடையில்லா மின்சாரம், கழிப்பறை, குளியல் அறை, வாகனங்கள் நிறுத்த, ஐந்து ஏக்கரில் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. அம்மாமண்டபம் முதல், கோவில் வரை, தடுப்பு அமைத்து, தரிசனத்துக்கு வழி செய்துள்ளனர். தவிர, கோவில் அருகில் செல்ல, நான்கு இலவச பஸ் சர்வீஸ் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் தங்க ஏதுவாக, கொள்ளிடம் ஆற்று கரையில், புதிதாக கட்டப்பட்ட யாத்திரி நிவாஸ் திறக்கப்பட்டு, நேற்று முதல் புக்கிங் செய்யப்பட்டது.தவிர, யாத்திரி நிவாஸ் வழியாக பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 
temple news
வடலுார்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தை ஏராளமானோர் வழி பட்டனர்.வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடக்கிறது. அதற்கான, யானை ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar