செஞ்சி: செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு புத்தாண்டை முன்னிட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்தனர். செஞ்சிக் கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலை மகா தீபாராதனை செய்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவில் வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர். செஞ்சி டி.எஸ்.பி., முரளிதரன் தலைமையில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டனர். செஞ்சிகோட்டை கமலக்கன்னியம்மன், காளியம்மன், பூவாத்தம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர்.