செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு ஆங்கில புத்தாண்டை முன் னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தங்க கவசம் அணிவித்தனர். தொடர்ந்து மகா தீபாராதனையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. புத்தாண்டுதினத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இவர்களின் வசதிக்காக செஞ்சி, விழுப்புரத்தில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர். கோவில் சிறப்பு பூஜை ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டையில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடந்தது. பழங்களினால் அலங்காரம் செய்திருந்தனர். சித்தகிரி முருகன் கோவில், மாரியம்மன் ,காளியம்மன், அகத்தீஸ்வரர் கோவில்கள் மற்றும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.