திண்டிவனம்: திண்டிவனம் பகுதியில் பல்வேறு கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பு வழிபாடு நடந்தது. புத்தாண்டையொட்டி பத்து அடி உயரம் உள்ள திண்டிவனம் செக்கடி விநாயகருக்கு மகா அபிஷேகம் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும் நடந்தது. நேரு வீதி செல்வவிநாயகர், ரயில் நிலையம் அரசடி விநாயகர் கோவில்களில் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவிலில் மகா அபிஷேகத்துடன் சிறப்பு அலங்காரத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவு 12.01 மணிக்கு தீபாராதனை நடந்தது. பூஜைகளை ராதாகுருக்கள் தலைமையில் பாலாஜி, கணேசன் குருக்கள்கள் செய்தனர். லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மகளிர் காவல்நிலையம் அருகில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் உள்ள ஷீரடி சாய்பாபா சிலைக்கு மகா அபிஷேகம் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கபட்டது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.