திண்டிவனம்: தீவனூர் விநாயகர் புத்தாண்டை முன்னிட்டு 108 லிட்டர் மகா பால் அபிஷேகம் நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனூர் பிரசித்திப்பெற்ற சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 31ம் தேதி இரவு 11 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 108 லிட்டர் பால் உள்ளிட்ட மகா அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் நள்ளிரவு 12.01 மணிக்கு தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா சகுந்தலா அம்மாள் மற்றும் மணிகண்டன் செய்திருந்தனர்.