புவனகிரி: புவனகிரி அடுத்த கீழ்புவனகிரி சீனுவாச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புவனகிரி அடுத்த கீழ்புவனகிரி சீனுவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சீனுவாச பெருமாள் மற்றும் சமேத ஸ்ரீ தேவி அம்மையாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சீனுவாசபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் முரளி செய்திருந்தார்.