பழநி : பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நடந்த ஆருத்ரா தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று முன் தினம் இரவு ஆருத்ரா அபிஷேகம், அம்மன் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது. திருவாதிரை நட்சத்திரம் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலையில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு நடராஜர் ஹோமம், சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. நடராஜர், சிவகாமியம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரர், சுவாமிகள், நான்குரத வீதிகளில் உலாவந்தனர். சிறப்பு அலங்காரத்தில் நடராஜர், சிவகாமியம்மன்சிவகாமியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பழநிகோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.