பதிவு செய்த நாள்
10
ஜன
2015
11:01
வயலோடு வயலாக வாழ்க்கையை நகர்த்தி வரும் விவசாயிகளுக்காக கொண்டாடப்படும் உழவர் திருநாளான பொங்கல் விழா, ஆண்டுதோறும் பாரம்பரிய பெருமையுடன் கோலாகலமாக நடக்கிறது. ஆனால், நவநாகரிகத்தின் பின்னால் ஓடும் இக்காலத்து நகரவாசிகள் மற்றும் இளசுகள் மத்தியில் பாரம்பரிய பொங்கல் விழாவின் மகத்துவம் மெல்ல மெல்ல மெலிந்து கொண்டே இருக்கிறது என்பது மூத்தோர்களின் வாதம்.
அப்படியில்லை, எங்களுக்கும் அதன் மீதான அருமை புரியும் என்பதை நமக்கு உணர்த்த, அரசு கலை அறிவியல் கல்லுாரியில் அற்புதமாக நடந்தது பொங்கல் விழா. அங்கு, பல வண்ண சேலைகளில் சிங்காரத்தோடு வந்த மாணவிகளும், வேட்டியை வரிந்து கட்டியபடி வந்த மாணவர்களும், தமிழர் திருநாளை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர். கிராமிய மணம் மாறாமல், மாணவியர், குழுவாக அமர்ந்து பானையில் பொங்கல் வைத்தனர். ‘அருட்பொங்கலும், அறிவு பொங்கலும் பெருகட்டும் உலகெங்கும் என்ற தலைப்புக்கு ஏற்றபடி உழவர்களின் பெருமையை எடுத்துச்சொல்லும் விதமாக, நடந்தேறிய அந்த பாரம்பரிய விழாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.