பதிவு செய்த நாள்
13
ஜன
2015
11:01
திருப்பதி: திருமலையில், கைக்குழந்தை தரிசன வரிசையில், குழந்தையின் தாய் வராததால், தந்தையை அனுமதிக்க தேவஸ்தான அதிகாரிகள் மறுத்தனர். ஆந்திர மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர், பிரவீன்லால் சிங். இவர், மனைவி மற்றும், ஒன்றரை வயது குழந்தையுடன், திருமலைக்கு நேற்று வந்தார். ஆனால், மனைவிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவர் விருந்தினர் மாளிகையில் தங்கினார். பிரவீன், தன் குழந்தையுடன், கைக்குழந்தை தரிசன வரிசைக்கு சென்றார். வரிசையில் நுழையும் முன், அங்கிருந்த ஊழியரிடம், நான் மட்டும் குழந்தையுடன் தரிசனத்திற்கு செல்ல முடியமா? என, பிரவீன் கேட்டார். அதற்கு ஊழியர், முடியாது, எனக் கூறினார். பிரவீன், மூன்று மணி நேரம் வரிசையில் நின்றிருந்து உள்ளே செல்லும் நேரத்தில், தேவஸ்தான ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. வருத்தமடைந்த பிரவீன், தரிசன வரிசைக்குள் நுழையும் முன், அதற்கான விதிமுறைகள் அனைவருக்கும் தெரியும் படி தெரிவித்தால், பல மணி நேரம் வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்படும், என்றார். எனினும் ஊழியர்கள், பிரவீனை உள்ளே அனுமதிக்கவில்லை. அவர், தரிசனம் செய்யாமல் திரும்பினார்.