பதிவு செய்த நாள்
13
ஜன
2015
12:01
குன்னூர் : ஜெகதளா ஹெத்தையம்மன் திருவிழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நீலகிரி உள்ள படுகரின மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும், ஹெத்தையம்மன் திருவிழா, கடந்த, 5ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் பிரசித்தி பெற்ற பேரகணி ஹெத்தையம்மன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான படுகரின மக்கள் குவிந்து, காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நேற்று, குன்னூர் அடுத்துள்ள ஜெகதளா ஹெத்தையம்மன் கோவிலில் வண்ண குடைகள் புடைசூழ ஹெத்தையம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கலாசார உடையுடன் ஆண்களும், பெண்களும் கோவில் வளாகத்தில் நடனமாடி மகிழ்ந்தனர். மாலை விரதம் மேற்கொண்ட பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட அம்மனை, வண்ண குடைகளில் கீழ், கோல் ஏந்தி கோவிலுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. இதேபோல், குந்தா சீமைக்கு உட்பட்ட கிராமங்களான மஞ்சூர் ஹட்டி, தூனேரி, முள்ளிமலை உள்ளிட்ட கிராமங்களில் ஹெத்தையம்மன் விழா நடந்தது. அடுத்த வாரம் பெம்பட்டி, நுந்தளா கிராமங்களில் ஹெத்தையம்மன் திருவிழா நடக்கிறது.