பதிவு செய்த நாள்
13
ஜன
2015
12:01
திருப்பூர் : திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு பெண்கள் கல்லூரி மாணவியர், நேற்று பொங்கல் வைத்து கும்மியடித்து, விழா கொண்டாடினர். இக்கல்லூரியில் உள்ள 16 துறைகளில், 2,860 மாணவியர் படிக்கின்றனர். நாளை முதல் 18 வரை பொங்கல் பண்டிகைக்காக கல்லூரி விடுமுறை என்பதால், நேற்று, சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தில், துறை வாரியாக மாணவியர் பொங்கல் வைத்தனர்; அனைத்து மாணவியிரும் பட்டுப்புடவை அணிந்து உற்சாகத்துடன் காணப்பட்டனர்.பொங்கல் பொங்கியபோது, ‘பொங்கலோ பொங்கல்’ என ஒலியெழுப்பி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பொங்கல், கரும்பு மற்றும் பழங்கள் வைத்து பூஜித்து, இறைவனை வழிபட்டனர். வட்டமாக நின்று கும்மியடித்து பாட்டு பாடி மகிழ்ந்தனர்.கல்லூரி முதல்வர் பாலசுந்தரம் மற்றும் துறை பேராசிரியர்கள், என்.எஸ்.எஸ்., ஆசிரியர்கள் பங்கேற்றனர். முன்னதாக, கல்லூரி வளாகத்தில் 20 மரக்கன்றுகள் நடப்பட்டன.