பதிவு செய்த நாள்
13
ஜன
2015
12:01
ராசிபுரம் : ஜனவரி, 20ம் தேதி, அலவாய்மாலை சித்தேஸ்வரர் கோவிலில், 17ம் ஆண்டு சங்கு அபிஷேக விழா நடக்கிறது. ராசிபுரம் அடுத்த, அலவாய்மலையில் பிரசித்தி பெற்ற சித்தேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் தை அமாவாசையை முன்னிட்டு, சங்காபிஷேக விழா கோலாகலமாக நடப்பது வழக்கம்.இந்த ஆண்டு விழா, ஜனவரி, 20ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 11 மணிக்கு, மகாகணபதி பூஜை, மகா சங்கல்பம், 447வது அமாவாசை பூஜை, 108 சங்கு அபிஷேகம், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், மகேஸ்வர பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து, விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் அன்னதானக்குழுவினர் செய்துள்ளனர்.