பதிவு செய்த நாள்
16
ஜன
2015
10:01
கோவை: மார்கழி நிறைவடைந்து, தைமாத பிறப்பை ஒட்டி நேற்று கோவையிலுள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். கோவையிலுள்ள கோவில்களில், மார்கழி, 30 நாட்களும் சிறப்பு வழிபாடுகள் அதிகாலை நேரத்தில் நடந்தது. இதையடுத்து, நேற்று தை மாதம் பிறந்தது. தை முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பேரூர் பட்டீசுவரர் கோவிலில், பட்டிபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், நடந்தது. சுவாமிக்கு பட்டு அ ங்கவஸ்திரம், வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். அதேபோல், கனகசபையில் வீற்றிருக்கும், நடராஜபெருமான், சிவகாமி அம்பாளுக்கு பச்சைபட்டு, சாத்தப்பட்டு, மலர்மாலைகள் அணிவித்து, வழிபாடு நடத்தப்பட்டது. ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில், வைசியாள்வீதி வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோவில், கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில், லட்சுமி நாராயண வேணுகோபாலசுவாமி கோவில், நரசிம்மர்கோவில், ராமர்கோவில் என, ஏராளமான கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ÷ மற்கொள்ளப்பட்டன; ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.