ராமேஸ்வரம்: பொங்கலையொட்டி, ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஸ்படிகலிங்க பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து கால பூஜை முடிந்ததும், ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். அங்கு சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. பின், பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினர். பின், கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.