பதிவு செய்த நாள்
16
ஜன
2015
11:01
குறிச்சி: கோவை, வைசியாள் வீதி ஸ்ரீ விமல்நாத் ஜெயின் கோவிலில், உப்தான்தப் விழா’ முன்னிட்டு, மோட்ச மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந் தது. ஜெயின் சமூகத்தில், துறவற வாழ்க்கையை அறிந்துகொள்ளும் வகையில், உப்தான்தப் விழா நடக்கிறது. இதில் பங்கேற்போர், ௪௫ நாட்கள், கோவில் மடத்தில் தங்கி, தினமும் பூஜை, பஜனை பாடல்கள் பாடுவது, 100 முறை பஞ்சாட்சர நமஸ்காரம் செய்வது போன்றவற்றில் ஈடுபடுவர். ஒரு நாள் விட்டு ஒரு நாள் மதியம் மட்டும், உணவு உட்கொள்வர். காலை, 9.00 முதல் மாலை, 6.00 மணி வரையிலான நேரத்தில் மட்டும், தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்படுவர். இந்நாட்களில், குடும்பத்தாருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளாமல், துறவு வாழ்க்கையை மேற்கொள்வர். இறுதி நாளில் இவ்வாழ்க்கையை மேற்கொண்டவர்களுக்கு, மோட்ச மாலை அணிவிப்பு ிகழ்ச்சி நடக்கும். அதுபோல, இவ்வாண்டும் விழா, கடந்த மாதம், 2ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம், கோவிலிலிருந்து, பால் கம்பெனி அருகேயுள்ள நேரு வித்யாலயா பள்ளி வரை, யானை, குதிரையுடன் ஊர்வலம் நடந்தது. இறுதி நாளான நேற்று காலை,6.30 மணிக்கு சனாத்ர பூஜை நடந்தது. 8.30 மணிக்கு மேல், 48 பேருக்கு, மோட்ச மாலை அணிவிக்கப்பட்டது. பேரம்பூரி ஆச்சார்யார் ஸ்ரீ ஹரிஹந்த் ஷாகர்ஜி மகராஜ் சாஹிப் பூஜைகளை நடத்தினார். ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.