இந்து, முஸ்லிம் கூட்டு விரதம்: மேலூரில் சமத்துவ பொங்கல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2015 02:01
மேலுார்:மேலுாரில் இந்துக்கள், முஸ்லிம்கள் கூட்டு விரதமிருந்து மாட்டுப்பொங்கலான நேற்று சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.மேலுார் தும்பைபட்டியில் வீரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கிராம மக்கள் ஜாதி, மத பேதமின்றி பள்ளிவாசல் முன் கூடினர். அங்கு கிராமத்தினரால் வாங்கப்பட்ட புது ஜவுளிகளை ரஜாக் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின் மேள, தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர்.அங்கு அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டு, அனைவருக்கும் மரியாதை செய்யப்பட்டது. பின் கோயிலை முஸ்லிம்கள் சுற்றி வந்து வழிபட்டனர். அதற்கு முன்பாக சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது.ஜாதி, மத வேற்றுமையின்றி மக்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அனைவரும் விரதமிருந்து விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.