திருப்போரூர்: திருப்போரூரில் பொங்கலையொட்டி 1008 பால்குட விழா நேற்றுமுன்தினம் கோலாகலமாக நடந்தது. திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள கந்தன் வழிபாட்டு மன்றத்தினர் ஆண்டுதோறும் பொங்கல் நாளில் பால்குட ஊர்வலம் வருவர் இந்தாண்டு 24ம் ஆண்டு பொங்கல் பால்குட விழா நேற்றுமுன்தினம் நடந்தது.இதில் பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து சன்னதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்குமாடவீதி, ஐயம்பேட்டைதெரு, செங்கல்பட்டு சாலை, இள்ளலூர் சாலை, வடக்கு மாடவீதி வழியாக ஊர்வலமாக வந்து பகல் 12:00 மணியளவில் வள்ளிதேவையானை சமேத கந்தசுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.அதன்பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு விசேஷ அலங்காரத்தில் கந்தபெருமான் வீதிஉலா உற்சவமும் நடந்தது.