பதிவு செய்த நாள்
19
ஜன
2015
11:01
சிதம்பரம்: சிதம்பரத்தில் திருப்பாற்கடல்குளம் நேற்று பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது.சிதம்பரம், வேங்கன் தெருவில்இருந்த பன்னிருதிருமுறை பாடல்
பெற்ற ஸ்தலமான திருப்பாற்கடல்திருக்குளம், தனிநபர்களால்ஆக்கிரமிக்கப்பட்டது. இதனை சிதம்பரம்,இந்து ஆலய பாதுகாப்பு குழுவினர்கடந்த 2013 அக்டோபர் மாதம்மீட்டு, புணரமைப்பு பணியை மேற்கொண்டனர்.
அதனையொட்டி அரசின் தன்னிறைவு திட்டம் மற்றும்பக்தர்களின் நன்கொடை எனமொத்தம் 17 லட்சம் ரூபாய் செலவில் குளத்தை தூர் வாரி, சுற்றுச்சுவர் மற்றும் படித்துறை அமைத்து
சீரமைக்கப்பட்டது.அதனையொட்டி நேற்று காலைதியாகப்பா தீட்சிதர், சிவராமன்தீட்சி
தர் தலைமையில் கணபதி ஹோமம்,நவக்கிரக ஹோமம், கங்கா பூஜைஉள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் தில்லை திருமுறை மன்றம் முருகேசன் ஓதுவார் தலைமை
யில் பன்னிரு திருமுறைமுற்றோதல்நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து நடைபெற்ற திருப்பாற்கடல் திருக்குளம் பக்தர்களுக்குஅர்ப்பணிப்பு விழாவிற்கு
சென்னை, மகாலட்சுமி அறக்கட்டளை நிர்வாகி மகாலட்சுமி சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.இந்து ஆலய பாதுகாப்புக் குழுதலைவர் செங்குட்டுவன் வரவேற்றார். தருமைஆதீனம் கட்டளை தம்பிரான் முத்துக்குமாரசாமி, வேளாக்குறிச்சி ஆதீனம் குருமகா சந்நிதானம் சித்திய ஞான மகாதேவ தேசிகபரமாசாரிய சுவாமிகள், சூரியனார்கோவில் ஆதீனம் குருமகா சந்நிதானம் சங்கரலிங்க தேசிக பரமாசாரியசுவாமிகள், சிதம்பரம் மவுன மடம்அதிபர் மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்குளம் கிழக்கு கரையில்பன்னிரு திருமுறை பாடல் கல்வெட்டு திறந்து வைத்தனர்.
வருவாய்த்துறை கூடுதல்தலைமை செயலர் ஸ்ரீதர், கலெக்டர்சுரேஷ்குமார், திருப்பாற்கடல் திருக்குளத்தில் மலர்கள் தூவி திருக்குளத்தை பக்தர்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர்.