பதிவு செய்த நாள்
19
ஜன
2015
11:01
திருப்பூர் : திருப்பூர்
ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை நேற்று
நிறைவடைந்தது.ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபி ஷேகம், டிச., 1ல்
நடைபெற்றது.
தொடர்ந்து,ஆகம விதிப்படி, 48 நாட்கள் மண்டல பூஜை
நடைபெற்றன; நேற்று, மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.காலை 7:00க்கு சிறப்பு
ஆராதனை, திருப்பாவை சாற்று மறை, கும்ப ஸ்தாபனம் நடந்தது. 81 கலசங்களில்
புனிதநீர் எடுத்து வரப்பட்டு, பல்வேறு மூலிகைகள் கொண்டு, அக்னி வேள்வி
நடந்தது. அதன்பின், ஸ்ரீவீரராகவப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது.
மஞ்சள்,
இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, 81
கலசங்களால், ஜல தீர்த்த சாந்தி நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை
நடந்தது.மாலை 5:00க்கு, ஸ்ரீதேவி, பூமிதேவிதாயாருடன், பெருமாள்
திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினார். பூப்பந்து விளையாட்டு,
தாளத்துக்கேற்ப நடனம், மாலை மாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குபின்,
திருக்கல்யாணம் நடந்தது. நிறைவாக, தோளுக்கு இனியான் கேடயத்தில்,
தாயார்களுடன் பெருமாள் வீதி உலா நடந்தது.