புதுச்சேரி: முருங்கப்பாக்கம் அங்காளம்மன் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு, தீச்சட்டி ஊர்வலம் நடந்தது. முருங்கப்பாக்கம் வில்லி யனுார் சாலையில் உள்ள அங்காளம்மன் கோவிலில், தை அமாவாசையொட்டி நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி, கோவிலை வலம் வந்து, மகா தீபம் ஏற்றி வழி பட்டனர். முருங்கப் பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.