இதுவும் சாந்தி மந்திரத்தில் ஒன்று. பிரபஞ்சத்தில் எங்கும். எல்லாவற்றிலும் முழுமை உண்டாகட்டும் என்பது இதன் பொருள். முழுமை எப்போது வாய்க்கும்? தேடல்கள் அனைத்தும் கைகூடிய நிலையில்தான் முழுமை ஏற்படும். அதாவது, யாருக்கும் எந்தவிதக் குறையும் இல்லாத நிலை. அப்படி எல்லாவிதமான தேடல்களும் விருப்பங்களும் எல்லாருக்கும் கைகூடி விடுமா? முடியாது.
அப்படியானால், இது எப்படி சாத்தியம்? எப்போது அது ஏற்படும்? எவை அத்தியாவசியமோ அவற்றைத் தவிர, மற்றவற்றில் ஆசையோ, கவனமோ கொள்ளாமல் இருக்கும் போதுதான் இது சாத்தியமாகும். அதன் விளைவாக நம் தேவைகள் போதும் என்கிற நிறைவு மனத்தில் உண்டாவது தான் முழுமையை ஏற்படுத்தும். அந்த மனநிறைவு எல்லா உயிர்களுக்கும் ஏற்படட்டும் என்பதுதான் இந்தப் பிரார்த்தனையின் நோக்கம்.