பதிவு செய்த நாள்
17
ஜூன்
2011
10:06
பழநி:பழநி கோயில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டன. வசூல் விபரம்: ஒரு கோடி 21 லட்ச ரூபாய்; தங்கம்- 1,272 கிராம்; வெள்ளி 7,600 கிராம்; அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் கரன்சிகள் 472. 500, 1000 ரூபாய் நோட்டுகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. கோயில் இணை கமிஷனர் ராஜா, துணை கமிஷனர் மங்கையற்கரசி, உதவி கமிஷனர் நடராஜன், அறநிலையத்துறை உதவி கமிஷனர் பச்சையப்பன், சிறப்பு அழைப்பாளர்கள் வேலுச்சாமி, தங்கவேலு பங்கேற்றனர். இன்றும் எண்ணப்படும்.