புதுப்பொலிவு பெறும் மாரியம்மன் தெப்பக்குளம் மையமண்டபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2011 10:06
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட, மாரியம்மன் தெப்பக்குள மைய மண்டபம் ரூ.40 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று நடக்கும் தெப்பத்திருவிழாவின்போது, மீனாட்சி அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் தெப்பத்தில் உலா வருவர். மற்ற நாட்களில் இது அறிவிக்கப்படாத விளையாட்டு மைதானமாக இருக்கிறது. மைய மண்டபத்தில் சிவபெருமானின் திருவிளையாடல்களை நினைவுகூறும் சிற்பங்களும், மண்டப கோபுரத்தின் அடுக்குகளில் உள்ள மரப்பலகைகளும் சேதமடைந்து உள்ளன. இதைதொடர்ந்து, இம்மண்டபத்தை கோயில் நிதி ரூ.40 லட்சத்தில் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது. நிர்வாக அதிகாரி ஜெயராமன் கூறுகையில், ""மண்டபம் முழுமையாக புதுப்பிக்கப்படுகிறது. குறிப்பாக மண்டப கோபுரம் மற்றும் நான்கு திசைகளிலும் உள்ள சிறுகோபுரங்களில் மஞ்சள் நிற வர்ணத்திற்கு பதில், மீனாட்சி கோயில் கோபுர வர்ணங்கள் அடிக்கப்படும். இப்பணி ஆரம்பித்த ஆறு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.