கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் காமாட்சி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், தைமாத வழிபாட்டையொட்டி, அதிகாலை 5:30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதனைத் தொடர்ந்து மந்திரங்கள் வாசித்து கலச ஆவாஹனம் நடத்தினர். ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மனுக்கு கலசாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து, மலர்மாலை சார்த்தி, சிறப்பு பூஜைகள் நடந்தது. அலங்கார தீபங்கள் காண்பிக்கப்பட்டது. பெண்கள் சுமங்கலி தாம்பூலம் கொடுத்து சாமி தரிசனம் செய்தனர்.