பதிவு செய்த நாள்
02
பிப்
2015
03:02
திருத்தணி: விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில், மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு, மூலவருக்கு பாலாபிஷேக விழா நடந்தது.
திருத்தணி, இந்திராநகர், கன்னிகோவில் எதிரில் விஷ்ணு துர்க்கையம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலின், கும்பாபிஷேகம், கடந்த ஆண்டு, டிச., 14ம் தேதி நடந்தது. தொடர்ந்து, மண்டலாபிஷேக விழா மற்றும் 108 பால்குட ஊர்வலம் நடந்தது. விழாவை ஒட்டி, திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள முக்கண் விநாயகர் கோவில் வளாகத்தில் இருந்து, பெண்கள் தலையில், 108 பால்குடங்களை சுமந்து கோவில் வளாகம் வரை ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மதியம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில் சிறப்பு தீபாராதனை, அம்மன் வீதியுலா நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விஷ்ணு துர்க்கையை தரிசனம் செய்தனர்.