பதிவு செய்த நாள்
02
பிப்
2015
03:02
பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவிலில், உலக நலன் வேண்டி, மகா சண்டி யாகம், நாளை நடைபெறுகிறது.
கடம்பத்துார் அடுத்துள்ள, பேரம்பாக்கத்தில் உள்ளது, காமாட்சி உடனாய சோளீஸ்வரர் கோவில். இந்த கோவிலில், உலக நலன் வேண்டி, மகா சண்டி யாகம், நாளை நடைபெற உள்ளது.
இதையொட்டி, நாளை காலை 8:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, உலகத்தில் அமைதியை நிலை நாட்டவும், மக்கள் மன நிம்மதியுடன் வாழ வேண்டியும், இந்த மகா சண்டி யாகம் நடைபெற உள்ளது. அதன்பின், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும்.