ஆரணி புதுகாமூர் புத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலில் திருவாசக விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2015 05:02
சிவ பரம்பொருள் ஆன்மாக்கள்யாவும் உய்யும் பொருட்டு பல ஸ்தலங்களில் சிறப்பு வாய்ந்ததும், புத்திரபேற்றை விரும்பி தசரதமஹா சக்ரவர்த்தியால் வழிபாடு செய்து ஸ்ரீராமர் முதலான அவதார புருஷர்கள் அவதரிக்க அருள்செய்த சிறப்பு பெற்றதும்.
வழிபாடு செய்வோர்க்கு புத்திரபேறு மற்றும் எல்லா நன்மைகளும் வழங்குவதும் ஜமதக்கனி முனிவரின் கமண்டலத்தில் வழிந்தோடி இடையறாது ஒழுகலாறாக ஒடுகின்ற கமண்டல நாகநதிக்கரையில் அமைந்துள்ள ஆரணி புதுகாமூர் ஷேத்திரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு பெரியநாயகி உடனமர் அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயத்தின் திருப்பணிகள் விரைவில் தொடங்கி நடைபெறவேண்டியும், உலக நன்மைக்காவும், 25.01.2015 ஞாயிற்றுக்கிழமை திருவாசக முற்றோதல் விழா சிவத்திரு தாமோதரன் அவர்கள் தலைமையில், நடைபெற்றது. சிவனடியார்களும், பக்தகோடிகளும், கலந்துகொண்டு சிறப்பித்தனர்.