பதிவு செய்த நாள்
04
பிப்
2015
02:02
காரிமங்கலம்:காரிமங்கலம் கடைவீதி, வீரபத்ர ஸ்வாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா வரும், 9ம் தேதி நடக்கிறது.விழாவை முன்னிட்டு வரும், 7ம் தேதி மாலை, 5.30 மணிக்கு கணபதி பூஜை, கங்கை பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம் ஆகியவை நடக்கிறது. 8ம் தேதி காலை, 8 மணி முதல் கோ பூஜை, யாகசாலை பிரவேசம், கலச பிரதிஷ்டை, கணபதி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை, மாலை, 3 மணிமுதல் இரண்டாம் காலயாக பூஜை, சண்டி ஹோமம், நவகிரக ஹோமம், வீரபத்ர ஸ்வாமி, விநாயகர், காளிகாம்பாள், இரவு, 10 மணிக்கு ஸ்வாமி சிலைகள் பிரதிஷ்டையும் நடக்கிறது.
வரும், 9ம் தேதி அதிகாலை, 3 மணிமுதல் மூன்றாம் காலயாகபூஜை, சாந்தி ஹோமம், மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. காலை, 6 மணிக்கு மேல், 6.50 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. கிரிராஜ சாஸ்திரிகள், சாந்தலிங்க சாஸ்திரிகள், மல்லிகார்ஜூனேஸ் சாஸ்திரிகள், ஈஸ்வர ஐயர் ஆகியோர் கும்பாபிஷேக விழாவை நடத்துகின்றனர்.வரும், 8 மற்றும், 9ம் தேதியில், விழா குழுவினர் மற்றும் காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி வீர சைவ லிங்காயத்து சமூகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.