பதிவு செய்த நாள்
17
பிப்
2015
01:02
தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிபேட்டை, அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா வரும், நாளை 18ம் தேதி நடக்கிறது.தர்மபுரி, குமாரசாமிபேட்டை, அங்காளம்மன் கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மயான கொள்ளை விழா, கடந்த, 14ம் தேதி கணபதி ஹோமம் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்றுமுன்தினம் காலை கரகம் ஊர்வலம் மற்றும் பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 7மணிக்கு அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று மாலை, 3 மணிக்கு பொங்கல் வைத்தல், இரவு, 7 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்தல், 10.30 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம், இரவு 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் ஸ்வாமி திருக்கல்யாணம் மற்றும் திருவீதி உலாவும் நடக்கிறது. நாளை அதிகாலை, 1 மணிக்கு முகவெட்டு நிகழ்ச்சியும், காலை, 9 மணிக்கு பக்தர்கள் அலகு குத்தும் நிகழ்ச்சியும், 11 மணிக்கு பூத வாகனத்தில் அம்மன் மயானம் புறப்படுதலும், 11 மணி முதல் மதியம், 2 மணி வரை மயான கொள்ளை நிகழ்ச்சியும், இரவு, 12 மணிக்கு பன்னீர் அபிஷேகமும் நடக்கிறது. 19ம் தேதி இரவு, 7 மணிக்கு பல்லக்கு உற்வசமும், திருவீதி உலாவும், 20ம் தேதி கும்ப பூஜை மற்றும் கொடி இறக்கமும் நடக்கிறது. விழா நாட்களில் இரவு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
* தர்மபுரி, எஸ்.வி.ரோடு அங்காளம்மன் கோவிலில், மயான கொள்ளை திருவிழா வரும், 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அதிகாலை, 1 மணிக்கு முகவெட்டு நிகழ்ச்சியும், காலை, 10 மணிக்கு அம்மன் மயானம் புறப்படுதலும், 11 மணிமுதல், 2 மணி வரை பச்சியம்மன் கோவில் அருகே உள்ள மயானத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சியும் நடக்கிறது. மதியம், 3 மணி முதல் இரவு வரை அம்மன் திருவீதி உலாவும், நள்ளிரவு, 12 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.
* தர்மபுரி, அன்னசாகரம் அங்காளம்மன் கோவிலில், மயான கொள்ளை திருவிழா வரும், 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி இன்று பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அதிகாலை, 1 மணிக்கு முகவெட்டு நிகழ்ச்சியும், காலை, 10 மணிக்கு அம்மன் மயானம் புறப்படுதலும், 11 மணிமுதல், 2 மணி வரை பச்சியம்மன் கோவில் அருகே உள்ள மயானத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சியும் நடக்கிறது. மதியம், 3 மணி முதல் இரவு வரை அம்மன் திருவீதி உலாவும், நள்ளிரவு, 12 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.