பதிவு செய்த நாள்
17
பிப்
2015
01:02
சேலம்: பூட்டு முனியப்பன் கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று அப்பகுதி மக்கள் கையெழுத்து வேட்டை நடத்தினர்.சேலம், அய்யந்திருமாளிகையில், பூட்டு முனியப்பன் கோவில் உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள அந்த கோவிலை இடிக்க தாசில்தார் மற்றும் பொதுப்பணித்துறையினர் தலைமையில், போலீஸார் உதவியுடன், சமீபத்தில் கோவிலை இடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இடிக்கும் முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பூட்டு முனியப்பன் கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வீடு, வீடாக கையெழுத்து வேட்டை நடத்தி வருகின்றனர். பொதுமக்களிடம் கையெழுத்தை வாங்கி இந்து முன்னணியின் மாநில நிறுவனர் ராமகோபாலன், இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்ரமணியம் ஆகியோருக்கு அனுப்ப உள்ளனர்.