பதிவு செய்த நாள்
20
ஜூன்
2011
10:06
நகரி:திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க, 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், திருமலையில் குவிந்துள்ளனர். சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில், 75 ஆயிரம் பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர்.வைகுண்டம் இரண்டாவது வளாகம் அனைத்தும் நிரம்பிய நிலையில், கோவிலுக்கு வெளியிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இலவச தரிசனத்திற்கு, 15 மணி நேரமும், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பக்தர்கள், 4 மணி நேரமும் காத்திருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டது. விடுதிகள் நிரம்பிய நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாலை ஓரங்களில் ஓய்வு எடுத்து வருகின்றனர்.