திருப்பரங்குன்றம் கோயில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2015 02:02
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம், திருநகர் கோயிலில்களில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளிய சத்திய கிரீஸ்வரருக்கு மாலை 5.30 முதல் இரவு 12.30 மணி வரை நான்கு கால பூஜைகள் அபிஷேகங்கள் நடந்தன. சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு இரண்டு கால பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தது. மலை மீதுள்ள காசிவிஸ்வநாதர், கீழரத வீதியிலுள்ள குருநாத சுவாமி கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
திருநகர் சித்தி விநாயகர் கோயில் காசி விஸ்வநாதர் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது. விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சிக்கு ரிக் வேத பாடசால மாணவர்களின் வேதபாராயணமும், சுவாமிக்கு அபிஷேகமும் நடந்தது. பாலாஜிநகர் சர்வ சித்தி விநாயகர் கோயிலில் நான்கு கால பூஜைகள் நடந்தன.
செக்கானுாரணி-: செக்கானுாரணி அருகேவுள்ள ஆதி சிவன், காமாட்சியம்மன் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் விடிய விடிய வழிபாடுகளை செய்தனர். டி.எஸ்.பி., சரவணக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.