கூடலூர் : கூடலூர் சீலைய சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. தர்ம ரட்சன சமிதியின் 1008 சிவநாம அர்ச்சனை நடந்தது. நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜைகள் நடத்த பெண்களுக்கு சிவலிங்கம், சிவன் பார்வதி படம் அர்ச்சனைப் பொருட்கள் வழங்கப்பட்டன. சிவனுக்கு ஒவ்வொரு கால பூஜைக்கும் ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட்டது. மாணவ மாணவி களின் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* கூடலூர் சுந்தரவேலவர் கோயிலில் மகா சிவாரத்திரி விழாவை முன்னிட்டு நடந்த முதல்கால பூஜையில் சிவனுக்கு கும்பம் வைத்து புண்ணிய நீர் அபிஷேகம் நடந்தது. இரண்டாம் கால பூஜையில் பால் மற்றும் பழச்சாறு அபிஷேகமும், மூன்றாம் கால பூஜையில் கரும்புச்சாறு அபிஷேகம் நடந்தது. நான்காம் கால பூஜையில் இளநீர் அபிஷேகம் நடத்தப்பட்டது. ஆன்மிக சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தது. "இறைவன் பெரிதும் உளம் மகிழ்வது அடியார்களின் பக்தி நெறியிலா? தொண்டு நெறியிலா ? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. நடுவராக கவிஞர் பாரதனும், பக்திநெறியே தலைப்பில் புலவர் அசோக்ராஜ், பேராசிரியர் திருநாவுக்கரசு, தொண்டு நெறியே என்ற தலைப்பில் புலவர் சேதுமாதவன், பேராசிரியர் முருகேசபாண்டியன் பேசினர். சுருளிமலை பழனி மலை பாதயாத்திரை குழுவினர் பஜனை பாடல்கள் பாடினர்.