கண்டமங்கலம்: வழுதாவூர் அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை பிரம்மோற்சவ விழா நடந்தது. கடந்த 16ம் தேதி மாலை கொடி யேற்றத்துடன் விழா துவங்கியது. சிவராத்திரியையொட்டி இரவு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், சர்வ அலங்காரம் நடந்தது. காலை 11.30 மணிக்கு வள்ளாலகண்டன் கோட்டை அழித்தலும், 11.45 மணிக்கு மேல் அம்மன் வீதியுலாவும் நடந்தது. மாலை 6.30 மணிக்கு சங்கராபரணி ஆற்ற ங்கரையில் மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.