செஞ்சி: வடவெட்டி ரங்கநாதபுரம் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை நடந்தது. செஞ்சி தாலுகா வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாசி தேர் திருவிழா கடந்த 17ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு சக்தி கரக ஊர்வலமும் நடந்தது. 18ம் தேதி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். காலை 9 மணிக்கு அக்னி கரகம் ஜோடித்து மயானத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு காலை 10 மணிக்கு பக்தர்களின் உணவு பொருட்களை படையலிட்டு மயானக்கொள்ளை நடத்தினர். அறங்காவலர் புண்ணியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.