அன்னை மூகாம்பிகையின் தெய்வீகத் தன்மையை அனுபவ பூர்வமாக உணர வைக்கக் கூடியது இந்த மந்திரம். இதில் ஐம் என்ற பீஜம் நான்கு முறை பிரயோகிக்கப்பட்டிருக்கிறது! ஐம் என்பது சரஸ்வதிக்குரிய பீஜம். இதன் வடிவமைப்பு பூரண ஞான நிலையை வழங்கும். கலையின் வெவ்வேறு வடிவங்களான இசை, கவிதை, ஒவியம், மட்டுமல்ல; பரம வேதாந்த ஞானத்தையும் அருள வல்லது. இந்த அரிய மந்திரத்தைப் புதன் அல்லது வியாழக்கிழமைகளில் ஆரம்பித்துத் தினமும் 32 முறை ஜபம் செய்துவர கல்வி கேள்விகளில் சிறப்புறுவதை உணரலாம். இதை ஜபிக்கும்போது கிழக்கு அல்லது வடக்கு திசைகள் உகந்தவை. மூகாம்பிகை படம் அல்லது விக்ரகம் முன் நெய் தீபம் ஏற்றியிருப்பது உத்தமம். குறைந்தது மூன்று மாதம் ஜபித்து வந்தால் சிறந்த முன்னேற்றத்தை காணலாம்.