திருச்சி: இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் நாளை, தேரோட்டம் நடக்கிறது.திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உப கோவிலான இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவிலில், மூலவர் அம்மனுக்கு நாள்தோறும் மாலை, 6 மணிக்கு அபிஷேகம் நடைபெறும்.தொடர்ந்து இரவு, 7மணிக்கு பல்வேறு வாகனங்களில், அம்மன் திருவீதி உலா நடக்கிறது. நாளை தேதி காலை, 9.10 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தென்னரசு, ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் செய்கின்றனர்.