பதிவு செய்த நாள்
28
பிப்
2015
12:02
மணப்பாறைமணப்பாறை அருகே உள்ள வீரப்பூரில் நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மணப்பாறை அருகே உள்ள வீரப்பூரில் பெரியகாண்டியம்மன் பொன்னர்-சங்கர், தங்காள், கருப்பண்ணசாமி ஆகிய கோவில்களில், மாசி பெருந்திருவிழா, கடந்த, 19ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வேடபரி, நேற்று முன்தினம் நடந்தது. வீரப்பூர் கோவிலிலிருந்து, பெரிய தேரில், பெரியக்காண்டியம்மன், புஷ்ப அலங்காரத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், மணப்பாறை தாசில்தார் கமலக்கண்ணன், வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை அறங்காவலர்களும், வீரப்பூர் ஜமீன்தார்களுமான மகேஸ் (எ) ராமகிருஸ்ணன், பொன்னழகேசன், சௌந்திரபாண்டியன், ஊர்ப்பட்டையதாரர்கள் பெரியபூசாரி வீரமலை, வையம்பட்டி யூனியன் சேர்மன் கல்பனா, துணை சேர்மன் அனியாப்பூர் முத்துச்சாமி, அ.தி.மு.க., வையம்பட்டி ஒன்றிய செயலாளர் சேது, மணப்பாறை ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட கவுன்சிலர்கள் கருங்குளம் பழனிச்சாமி, மலர்விழி அனியாப்பூர் ஊராட்சிமன்றத்தலைவர் சாவித்திரி பெரியசாமி, ஒன்றிய துணை செயலாளர் சவுந்தர், இளைஞரணி ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், பஞ்சாயத்துச் செயலாளர் ரமேஷ், ஜோதிபாசு ஆகியோர், திருத்தேர் வடம்பிடித்து துவக்கி வைத்தனர். தேரோட்டத்தையொட்டி, கரூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து, பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து, திருவிழாவில் கலந்து கொண்டனர். மணப்பாறை டி.எஸ்.பி., ராஜராஜன், தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, இன்று மாலை, 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.