பதிவு செய்த நாள்
03
மார்
2015
12:03
கடம்பத்தூர் :கடம்பத்தூர், சித்திபுத்தி விநாயகர் கோவிலில், மார்ச் 8ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கடம்பத்தூர் ஊராட்சி மன்றம் அருகே உள்ளது சித்திபுத்தி விநாயகர் கோவில். இந்த கோவிலில், சிறிய கோபுரம் அகற்றப்பட்டு, பெரிய கோபுரம் கட்டப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேகம், வரும் 8ம் தேதி நடைபெறஉள்ளது. முன்னதாக, 7ம் தேதி, காலை 7:30 மணிக்கு, கணபதி ஹோமமும், நவக்கிரக ஹோமமும், பூர்ணாஹூதியும் நடைபெறும். பின் மாலை 6:00 மணிக்கு, முதல் கால யாகசாலை பூஜையும், பூர்வாங்கமும், கலாகர்ஷனமும் நடைபெறும்.
பின், மறுநாள், 8ம் தேதி காலை 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மகா பூர்ணாஹூதியும் நடைபெறும். பின், காலை 7:00 மணி முதல், 8:30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், பகல் 11:00 மணிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும்.