பதிவு செய்த நாள்
03
மார்
2015
12:03
ஆர்.கே.பேட்டை :அக்னி வசந்த உற்சவத்தில், திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நாளை இரவு நடக்கிறது. இதற்காக, பெண் வீட்டார் சார்பில், சீர்வரிசை பொருட்கள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன. பொதட்டூர்பேட்டை திரவுபதியம்மன் அக்னி வசந்த உற்சவம், கடந்த மாதம், 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நடந்து வருகிறது. தினமும் மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
நேற்று இரவு, சைந்தி பங்கம், இன்று குறவஞ்சி நாடகம் நடக்கிறது. நாளை, திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதற்காக, பெண் வீட்டார் சார்பில், சீர்வரிசை பொருட்கள் வாங்கி வைக்கப்பட்டு, தயாராக உள்ளன. நாளை, மாலை 5:00 மணிக்கு, திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. அதை தொடர்ந்து, கோவில் வளாகத்தில் விருந்து வைபவம். இரவு 7:00 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, அம்மன் வீதியுலா வருகிறார். இரவு 11:00 மணிக்கு, திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது.