தேனி:உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் நேற்று காலை காளாத்தீஸ்வரருக்கும், ஞானாம்பிகைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இன்று காலை தேரோட்டம் நடக்கிறது.உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் விழா நிகழ்ச்சிகள் பிப்., 21 ல் தொடங்கியது. நேற்று காலை கோகிலாபுரத்தில் இருந்து பெண் வீட்டார் சார்பாக திருமணத்திற்கு வேண்டிய சீர்வரிசை பொருட்களுடன் அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.காலை 10.30 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி, தங்கநகைகள் அணிந்து அம்மன் அழைத்து வரப்பட்டார்.
பட்டு வேஷ்டியில் காளாத்தீஸ்வரர் அழைத்து வரப்பட்டார். சிவாச்சாரியார் நீலகண்டசாஸ்திரியார் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி அம்மனை தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. இன்று காலை 9.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.