பதிவு செய்த நாள்
06
மார்
2015
12:03
திருவள்ளூர்: பஞ்சேஷ்டியை அடுத்துள்ள காரிய சித்தி கணபதி கோவிலில், வரும் 9ம் தேதி, சங்கட நிவாரண ஹோமம் நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டம், பஞ்சேஷ்டியை அடுத்துள்ள நத்தம்(இகனபாக்கம்) கிராமத்தில், ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள காரிய சித்தி கணபதி சன்னிதியில், மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, வரும் 9ம் தேதி, காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, நவகலச பூஜை விசேஷ அபிஷேகம் நடைபெறுகிறது. பின், சங்கட நிவாரண மகா ஹோமம், விசேஷ திரவிய ஹோமம், கலச அபிஷேகம் நடைபெறுகிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காரிய சித்தி கணபதிக்கு, கணபதி கஹார சகஸ்ரநாமாவளி அர்ச்சனை செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற உள்ளது.