பதிவு செய்த நாள்
06
மார்
2015
12:03
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வரும், 8ம் தேதி, 9ம் தேதிகளில் பூச்சொரிதல் விழா நடக்கிறது. இந்த நாட்களில், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, சேலத்தை நோக்கி செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் திருச்சியில் புறப்பட்டு, குடமுருட்டி வழியாக ஜீயபுரம், பெட்டவாய்தலை, குளித்தலை, முசிறி, தொட்டியம், நாமக்கல் வழியாக செல்ல வேண்டும். அதே போல், திருச்சிக்கு வரும் பஸ்கள், கனரக வாகனங்கள், முசிறி øகாட்டி வழியாக குளித்தலை, பெட்டவாய் தலை, ஜீயபுரம், குடமுருட்டி வழியாக வர வேண்டும். மேலும், அரியலூ ரில் இருந்து திருச்சி வரும் பஸ்கள், கனரக வாகனங்கள் அனைத்தும், புள்ளம்பாடி வழியாக சங்கேந்தி, தச்சங்குறிச்சி, இருங்களூர், கைகாட்டி வந்து பிறகு, திருச்சிக்கு வரவேண்டும்.சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா தொடர்பாக, வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் குறித்து, திருச்சி எஸ்.பி., ராஜேஸ்வரி நேற்று, திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் ஆட்டு சந்தை, மண்ணச்சநல்லூர் ரோடு, பெட்ரோல் பங்க், சமயபுரம் புது பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.