சாயல்குடி: சாயல்குடி அருகே காணிக்கூர் பாதாளகாளியம்மன் கோயிலுக்கு பவுர்ணமி தின விளக்கு பூஜை நேற்று நடந்தது. மாலை 6 மணி முதல் அம்மனுக்கு பால், நெய், பஞ்சாமிர்தம், இளநீர் அபிஷேகம் செய்து, தங்க கிரீட அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 11 மணியளவில் விளக்கு பூஜை நடந்தது. இதில், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பெண்கள் பங்கேற்று, வேண்டுதலை நிறைவேற்றினர். பிள்ளையார்குளத்தில் பனையூர் அம்மனுக்கும் பவுர்ணமி தின விளக்கு பூஜை நடந்தது. பெண்கள் குத்துவிளக்கேற்றி வழிபட்டனர்.