நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழவை முன்னிட்டு நாளை "பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்., 23 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அதை தொடர்ந்து தினந்தோறும் காப்பு கட்டுதல், கம்பம் நகர்வலம் வருதல், பல்வேறு வாகனங்களில் அம்மன் பவனி வருதல் நிழ்ச்சிகள் நடந்தன. நாளை காலை அக்னி சட்டி எடுத்தல், கழுகுமரம் ஊன்றுதல், கழுகுமரம் ஏறுதல், பூக்குழி பராமரித்தல் ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு "கம்பம் எடுத்துச்சென்று அம்மன் குளத்தில் விடும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி ஞானசேகரன், தக்கார் வேல்முருகன், கோயில் பூசாரிகள் சொக்கையாநாயுடு, கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், சின்னராஜ், நடராஜன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.