பதிவு செய்த நாள்
09
மார்
2015
11:03
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள திருக்கோயில்பத்து (அருந்தவபுரம்) என்ற ஊரில் உள்ள பழமையான சிவாலயத்தை, அப்பகுதி மக்கள் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன், கோவில் முன், நிலத்தை தோண்டும் போது, மிகப்பழமையான புத்தர் சிலை ஒன்று, தலை இல்லாமல் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் ஆய்வு செய்தார்.
பின், அவர் கூறியதாவது:. கங்கை கொண்ட ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில், 8ம் நூற்றாண்டில் வெளியிட்ட செப்பேட்டுத்தொகுதி, நூறாண்டுகளுக்கு முன் திருக்கோயில் பத்து அருகேயுள்ள புத்தூர் என்ற ஊரில் பூமியில் புதைந்திருந்து வெளிப்பட்டது. சேவு பாண்டியர் என்பவரால் எடுக்கப் பெற்ற அத்தொகுதி, கரந்தை செப்பேடுகள் என்ற பெயரில், சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. பெரிய அளவில், 57 செப்பேடுகளில் சாசனம் எழுதப் பெற்று ராஜேந்திரன் முத்திரையுடன், அது காணப்படுகிறது. ராஜேந்திரசோழன், தன் தாய் திருபுவனமாதேவி பெயரில், மிகப் பிரமாண்டமான ஏரியை அமைத்ததோடு, அதனருகில் இருந்த, 51 ஊர்களிலிருந்து அரசுக்கு வருவாயாகக் கிடைக்கும், 51 ஆயிரத்து ஐம்பது கலம் நெல்லை, பல்வேறு சாத்திரங்களில் உள்ள அறிஞர்களின் உணவுக்காக அளித்தான் என்பதை, அந்த செப்பேட்டு சாசனம் விவரிக்கிறது. அதில், பெரிய ஏரி பற்றிய பல செய்திகளும், சுற்றுப்புற ஊர்களின் நிலஅளவை, பல்வேறு சமயம் சார்ந்த கோவில்கள் பற்றிய விவரங்களும் குறிக்கப் பெற்றுள்ளன. இப்போது கிடைத்துள்ள புத்தர் சிலை மேலாடையுடன் பத்மாசன கோலத்தில் தியானத்தில் அமர்ந்துள்ளது, போல் உள்ளது. ஆனால், தலை இல்லாமல் காணப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.