அன்னுார் : கோவில்பாளையம், சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. கோவில்பாளையம், சத்தி ரோட்டில், பழமையான சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேக விழா, கடந்த 6ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நவகிரக ஹோமம், கோ பூஜை நடந்தது. மதியம் மாரியம்மன் கோவிலிலிருந்து தீர்த்தம் மற்றும் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நேற்று காலை மண்டபார்ச்சனையும், கருவறையில் இறைவன் திருமேனியை நிலை நிறுத்துதலும் நடந்தது. இன்று (9ம் தேதி) அதிகாலையில், நான்காம் கால யாக பூஜை நடக்கிறது. காலை 7:00 மணிக்கு, சக்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பின், மகா அபிஷேகம், மகா அலங்காரம் நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.