வேலாயுதம்பாளையம்: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே, மரவாபாளைத்தில் உள்ள குட்டகருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி தீர்த்தக்குடங்கள் எடுத்து, கோவிலை வந்தடைந்தனர். பின்னர், கருப்பண்ணசாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. சுற்று வட்டாரபகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குட்ட கருப்பண்ணசாமியை தரிசனம் செய்தனர். பெண்கள் பொங்கல் வைத்து, பூஜை செய்தனர்.