கிருஷ்ணகிரி: திருவள்ளுவருக்கு கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது. பர்கூர் அடுத்த குட்டூர் பஞ்சாயத்து ஜிஞ்சம்பட்டி குழந்தைவேல் நகரில், ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில், திருவள்ளுவருக்கு கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை உதயகுமார் பூமி பூஜையை நடத்தி, கோவில் கட்டுவதற்கான கட்டிட பணியை தொடங்கி வைத்தார். மாவட்ட வள்ளுவர் குல பேரவை தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வேணுகோபால், ஸ்ரீதர், கனகராஜ், புருஷோத்தமன், பரந்தாமன், கோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.