பதிவு செய்த நாள்
10
மார்
2015
12:03
ஓசூர்: ஓசூர் ஏரித்தெருவில், புதிதாக கட்டப்பட்ட வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.விழாவையொட்டி, கடந்த, 8ம் தேதி காலை, 9 மணிக்கு, கங்கை பூஜை, கோ பூஜை, கணபதி பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், பரியக்னி கரணம், ஆலய பிரவேசம், அஷ்டதிக் பாலக பலி உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து, யாகசாலை பிரவேசம், கலச ஸ்தாபனம், புண்ணியாக வாசனம், நாந்தி அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், நவகிரக கலச ஸ்தாபனம், பிரதான கும்ப கலச ஸ்தாபம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை, 7 மணிக்கு, இன்னிசை கச்சேரி நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு, பஞ்சாமிர்த அபிஷேகம், ஹோமம், நாடி சந்தானம், விக்ரக பிராண பிரதிஷ்டாபனம் மற்றும் காலை 9.15 மணிக்கு, வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட கிரிராஜா சாஸ்திரி மற்றும் குழுவினர் மற்றும் ஓசூர் மிடுகரப்பள்ளி உமாபதி சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நகராட்சி துணைத்தலைவர் ராமு, தொழிலதிபர்கள் சுரேஷ்பாபு மற்றும் பாபு, கோவில் கமிட்டி தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.